தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பலரும் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்யவுள்ள நிலையில், பிறகு வெள்ள நிவாரண நிதி மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய தொகுப்பு பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்பட்டது. அதனைப் போலவே இந்த ஆண்டும் 6,000 ரூபாய் வெள்ள நிவாரண நிதியுடன், ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.