fbpx

ரேஷன் கடை ஊழியர்கள் இதை செய்தால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை..

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் போது, சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்..

அரசின் ஒவ்வொரு உதவிக்கும் ஆதாரமாக கருதப்படும் ஆவணங்களில் ரேஷன் கார்டு முதன்மையானது. இதன் மூலம் அரசு வழங்கும் நிவாரண தொகை முதல் பல்வேறு உதவிகளை பெறமுடியும்.. மேலும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. எனினும் இந்தப் பொருட்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன.. ஆனால் ரேஷன் பொருட்களை நம்பி வாழும் பல ஏழைக் குடும்பங்கள் இருந்தாலும், சில உயர் நடுத்தர வகுப்பினரும், ஏன் பணக்காரர்களும் கூட இந்த நன்மைகளை பெறுகின்றனர்.. 

இந்நிலையில் ரேஷனில் பொருட்கள் வாங்கும் போது மற்ற பொருட்களையும் வாங்குபடி ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக பொதுமக்கள் பலரும் புகார் தெரிவித்திருந்தனர்.. இந்த சூழலில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் போது, சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.. மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.. மேலும் ரேஷனில் பொருட்களே வாங்காதவர்கள் கௌரவ அட்டை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்..

Maha

Next Post

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமா? அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்..!

Wed Sep 21 , 2022
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்று தொடக்கம். அக்டோபர் 24ஆம் தேதி (திங்கட்கிழமை) 2022ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தீபாவளிக்கு முந்தைய 2 நாட்கள் (சனி, ஞாயிறு) அரசு விடுமுறையாக இருப்பதால், அக்டோபர் 21ஆம் தேதியே பயணத்தை தொடர வாய்ப்பு […]

You May Like