fbpx

மக்களே…! ரேஷன் கடைகளில் 2024 – ம் ஆண்டுக்குள் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்…!

2024 – ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று இந்திய உணவுக்கழகத்தின் சென்னை மேலாளர் தேவேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ஆந்திரா, சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறினார். பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் கோதுமை ஆவடிக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கிடங்கில் இருந்து சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் ரேஷன் கடைகளுக்கான அரிசி அனுப்பப்படுவதாக குறிப்பிட்ட அவர், ஒன்றரை கோடி பயனாளிகளுக்கு ரேஷன் அரிசி வழங்கப்படுவதாக கூறினார். 83 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆவடிக் கிடங்கில் 1,71,000 மெட்ரிக்டன் அரிசி இருப்பு வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தஞ்சாவூர், வேலூர், கடலூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி, சென்னை ஆகிய ஆறு இடங்களில் கிடங்குகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Vignesh

Next Post

ஒரு கல்லூரி பேராசிரியர் செய்ற வேலைய இது….? தாய்க்கும் மகளுக்கும் ஒன்றாக பாலியல் தொல்லை வழங்கிய பேராசிரியர் கல்லூரி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை இறுதியில் என்ன நடந்தது தெரியுமா….?

Sun Sep 10 , 2023
ஒரு கல்லூரி மாணவிக்கு அந்த கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியரே பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். அதோடு, மட்டுமல்லாமல், அந்த மாணவியின் தாயாருக்கும் அந்த பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக, அந்த மாணவி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாநகரில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், பேராசிரியராக லியோ ஸ்டான்லி. என்பவர் பணியாற்றி […]

You May Like