fbpx

“நான்லா வியாபாரம் ஆகமாட்டேனா உனக்கு.”? டைலாக் புகழ் ரெடின் கிங்ஸ்லிக்கு டும் டும் டும்.! இணையதளத்தில் வைரலாகும் திருமண புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லீ. கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். டாக்டர், ஜெய்லர், பத்து தல, காஞ்சுரிங் கண்ணப்பன் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

46 வயதான இவர் தற்போது பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து சங்கீதா மற்றும் கிங்ஸ்லி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது.

இவர் திருமணம் செய்திருக்கும் நடிகை சங்கீதா மாஸ்டர் படத்தில் விஜயின் தோழியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமண புகைப்படங்களை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் நடிகர் சதீஷ்குமார் மணமக்களை வாழ்த்தி பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Next Post

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! மூச்சுத் திணறல் ஏற்பட்டு 10 வயது தமிழக சிறுமி பலி.!

Sun Dec 10 , 2023
தமிழகத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பெற்றோருடன் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமியின் உடல் பம்பை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசனை முன்னிட்டு கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை சென்று வந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த குழுவில் […]

You May Like