fbpx

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஏராளமான போலீஸார் குவிப்பு…

மணிப்பூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் துப்பாக்கிச்சூடு நடந்ததன் எதிரொலியாக 11 வாக்குச்சாவடிகளில் நாளை(ஏப்.22) மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரில் உள்ள 2 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் நாளன்று மக்கள் அமைதியாக வாக்களித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கிழக்கு இம்பால் மாவட்டத்தின் மொய்ரங்காம்பு சாஜேப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கிருந்த வாக்காளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் சேதப்படுத்தப்பட்டன.

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு மூன்று குற்றவாளிகளும் நான்கு சக்கர வாகனத்தில் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பிறகு அன்று மாலையே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 32 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை எழுப்பியது. இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதம் மற்றும் துப்பாக்கிச் சூடு எதிரொலியாக மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்.22 மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Post

Heart Attack | மாரடைப்பை தடுக்க தினமும் கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்.!!

Sun Apr 21 , 2024
Heart Attack: இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு மற்றும் இதய நோய் மனிதர்களை மிகவும் அச்சுறுத்து ஒன்றாக இருக்கிறது. மிகவும் இள வயதிலேயே இதய நோயாளியாக மாறி வருகின்றனர் . நன்றாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர்கள் கூட 30-35 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர். காலை மாலை வேலைகளில் உடற்பயிற்சி செய்து வியர்வை சிந்தி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்களுக்கு கூட ஒரே இரவில் மாரடைப்பு(Heart Attack) ஏற்பட்டு மரணம் சம்பவிக்கிறது. […]

You May Like