ஊட்டச்சத்து என்பது அனைத்து வயதினருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று, அதிலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு பெரியவர்களை விட ஊட்டச்சத்து மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால், வேகமான வளர்சிதை மாற்றங்கள் காரணமாக, பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிகம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் சோர்வாக மட்டும் தான் இருப்பார்கள், வேறு எந்த பாதிப்பும் இருக்காது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, பெரும் மோசமான விளைவுகள் குழந்தைகளுக்கு ஏற்படும். அதிலும் குறிப்பாக, இது புற்றுநோயுடன் நெருக்கமாக தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் உயிரிழக்க இது தான் முக்கிய காரணமாக அமைகிறது. அந்த வகையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, வீரியம் மிக்க நோயின் அறிகுறியாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஊட்டச்சத்து குறைபாடை கண்டறிந்து, அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப் பட வேண்டியது அவசியம்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, டி.என்.ஏ-வுக்கு சேதம் ஏற்படலாம். இதன் விளைவாக புற்றுநோய் உருவாகலாம். ஆனால் இதை எதிர்த்துப் போராட குழந்தைகளின் உடலில் தெம்பு இருக்காது. ஆனால் ஆரோக்கியமான உணவு சாப்பிடும் போது, டி.என்.ஏ பழுதுபார்க்கும் திறன் குழந்தைகளின் உடலுக்கு இருக்கும்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது, அவர்கள் சுலபமாக தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவார்கள். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், HPV மற்றும் EBV போன்ற நாள்பட்ட தொற்றுகளின் விளைவாக புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்.
மேலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, வளர்ச்சியில் தாமதம் ஏற்படும். வளர்சிதை மாற்றத்தின் விளைவாக புற்றுநோய் ஏற்படும். குழந்தைகளிடத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க, வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை கட்டாயம் கொடுக்க வேண்டும். மேலும், ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் வகைகள் கொடுப்பதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.
Read more: கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க, இது தான் சிறந்த வழி; டாக்டர் சிவராமன் அட்வைஸ்..