fbpx

உடல் எடையை குறைக்க வேண்டுமா…..? அப்படி என்றால் இதை மட்டும் செய்து சாப்பிட்டு பாருங்கள் உடல் எடையை குறைத்த ரகசியம் என்னவென்று அனைவரும் கேட்பார்கள்…..!

பலர் தங்களுடைய உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு விஷயங்களை முயற்சி செய்து பார்த்தும் அது முடியாமல் போனதால் மிகுந்த சோர்வடைந்து இருப்பார்கள் அப்படிப்பட்ட நபர்களுக்கான செய்தி தான் இது.

இப்போது உடல் எடையை குறைப்பதற்கு அதிகம் சிரமப்பட தேவை இல்லை இந்த உணவை செய்து சாப்பிட்டால் போதுமானது உங்களுடைய உடல் எடை குறைந்ததை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

உடல் எடையை குறைக்க ஓட்ஸ் குயினோவா கிச்சடியை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள் பலன் கிடைப்பது உறுதி.

தேவையான பொருட்கள்

ஓட்ஸ்-¼ கப்

குயினோவா-¼ கப்

பாசிப்பருப்பு-¼ கப்

அரிசி- 1 டீஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- 1 டீஸ்பூன்

பூண்டு- 3-5

இஞ்சி- சிறிய துண்டு

பட்டை-1

கிராம்பு-2

ஏலக்காய்-1

வெங்காயம்-1

கருவேப்பிலை- சிறிதளவு

பச்சை மிளகாய்-3-5

தக்காளி-1

தண்ணீர்-4கப்

மிளகு பொடி-½ டீஸ்பூன்

கொத்தமல்லி இலைகள்- சிறிதளவு

மஞ்சள் பொடி-¼டீஸ்பூன்

காய்கறிகள்-1 கப்

செய்முறை

முதலில் ஓட்ஸ் குயினோவா, அரிசி பாசிப்பருப்பு நன்றாக நீரில் கழுவி சுத்தம் செய்து தனித்தனியே அரை மணி நேரத்திற்கு நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு குக்கரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருவேப்பிலை போன்றவற்றை ஒன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்தபடியாக பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி. பூண்டு, வெங்காயம் உள்ளிட்டவற்றை சேர்த்து, நிறம் மாறும் வரையில் வதக்க வேண்டும். இத்துடன் பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

நன்றாக வதங்கிய தக்காளியுடன் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை ஒரு கப் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும். இதற்கு கேரட், கேப்ஸிகம், பீன்ஸ், பச்சை, பட்டாணி போன்ற காய்கறிகளை பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நேரத்தில் ஊற வைத்திருக்கின்ற ஓட்ஸ் அரிசி பாசிப்பருப்பு போன்றவற்றை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ள வேண்டும். பிறகு தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து கொதிக்கும் போது வடித்து வைத்திருக்கின்ற கலவையை ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும்.

அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்த பிறகு குக்கரை மூடி மூன்று விசில் வந்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டும். பிரஷர் அடங்கிய பின்னர் மிளகு பொடி மற்றும் கொத்தமல்லி இலைகள் போன்றவற்றை தூவி பரிமாறலாம். உங்களுக்கு விருப்பம் என்றால் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான கிச்சடி ரெடி நீங்களும் தயார் செய்து ருசித்துப் பாருங்கள்.

Next Post

உங்கள் சமையலறையில் துர்நாற்றம் வீசுகிறதா…..! அதனை எளிதாக நீக்கும் வழிமுறைகளுக்கான எளிமையான டிப்ஸ் இதோ…….!

Thu Aug 3 , 2023
பல பெண்கள் சமையலறையில் ஏற்படும் கறை மற்றும் துர்நாற்றத்தை நீக்க முடியாமல் பெரும் அவஸ்தைக்கு ஆளாவார்கள். அவர்களுக்கான செய்தி தான் இந்த பதிவு. இதனைப் படித்து தெரிந்து கொண்டு உங்களுடைய சமையலறையை எப்போதும் நறுமணமாக வைத்துக் கொள்ளுங்கள். முதலில் உங்கள் சமையலறையில் இருக்கும் சிங்க் தொட்டியில் பேக்கிங் சோடாவை தெளிக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அந்த தொட்டியை பிரஷ் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும் பிறகு குச்சியை வைத்து […]

You May Like