fbpx

வெளுத்து வாங்கும் கனமழை.. கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது..

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது, திருவனந்தபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மாநிலத்தின் மிக நீளமான நதியான பெரியாறு நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுவட்டார கிராமங்களில் நீர் சூழந்துள்ளது..

தொடர் மழை காரணமாக சாலக்குடி, பம்பை, மணிமாலா, அச்சன்கோவில் உள்ளிட்ட பிற ஆறுகள் அபாய அளவை நெருங்கி வருகின்றன. அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி சாலக்குடி ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் வெளியேற தயாராக இருக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மலைப்பாங்கான பகுதிகளில் இரவு நேரத்தில் பயணம் செய்வது அச்சுறுத்தலாக இருப்பதால் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் பயணம் செய்வது அச்சுறுத்தலாக உள்ளதால், இடுக்கியில் உள்ள பொன்முடி, கீழ் பெரியாறு, கல்லார்குட்டி, எரட்டையாறு, குண்டலா ஆகிய ஆறு முக்கிய அணைகளில் நீர் இருப்பு உள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மூழையாறு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. கனமழையால் மாநிலத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Maha

Next Post

வரும் 7ஆம் தேதி நடக்கும் பயங்கரம்..! மேலும் தீவிரமடையும் பருவமழை..! தமிழகத்தின் நிலை என்ன? - இந்திய வானிலை மையம்

Fri Aug 5 , 2022
வரும் 7ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக வரும் 7ஆம் தேதி அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், […]

You May Like