fbpx

ஒரே நாளில் 23 சாதனைகளை படைத்த ரெகெரா கார்

கோனிக்செக் (Koenigsegg) நிறுவனத்தின் சூப்பரான கார் மாடல்களில் ஒன்றாக ரெகெரா (Regera) இருக்கின்றது. இந்த கார் மாடலே ஒரே நாளில் 23 சாதனைப் படைகளைப் படைத்த வாகனம் ஆகும். முன்னதாக ரைமக் நெவரா (Rimac Nevera) முறியடித்த அனைத்து சாதனைகளையும் ரெகெரா முறியடித்திருக்கின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த கார் காதலர்களையும் ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது. நம்பவே முடியாத 0-400-0 kph சாதனையை வெறும் 28.81 செகண்டுகளில் அந்த கார் முறியடித்திருக்கின்றது. இது அதிசயத்தின் உச்சம் ஆகும். இவ்வளவு குறைவான செகண்டுகளுக்குள் இந்த சாதனையை கோனிக்செக் ரெகெரா முறியடித்திருக்கின்றதா என்றே பலரும் வாயை பிளக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால், கோனிக்செக் ரெகெரா வெறும் 28.81 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 400 கிமீ வேகத்தையும், இந்த உச்சபட்ச வேகத்தில் இருந்து மணிக்கு பூஜ்ஜியம் கிமீ வேகத்தையும் தொட்டிருக்கின்றது. இதனால்தான் அனைவரும் கோனிக்செக் ரெகெரா காரை பார்த்து ஆச்சரியமடையத் தொடங்கி இருக்கின்றனர். அதாவது, அரை நிமிடங்களுக்கும் உள்ளாகவே டாப் ஸ்பீடை தொட்டுவிட்டு பூஜ்ஜியம் ஸ்பீடிற்கு அந்த கார் மீண்டும் வந்திருக்கின்றது. இந்த சாதனை பலரை பேய் அடித்ததைப் போல உறையச் செய்திருக்கு என்றாலும் மிகையாகாது. இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு சாதனைகளை கோனிக்செக் ரெகெரா படைத்திருக்கின்றது.

அந்தவகையில், வெறும் 20.68 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 400 கிமீ வேகத்தையும் (இதுவே காரின் டாப் ஸ்பீடு ஆகும்), 400 கிமீ வேகத்தில் இருந்து பூஜ்ஜியம் வேகத்தை வெறும் 8.13 செகண்டுகளிலும் அந்த கார் தொட்டு சாதனைப் படைத்து உள்ளது. இதேபோல், 0-250-0 mph சாதனையை 29.60 செகண்டுகளிலும், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 250 மைல் வேகத்தை 21.35 செகண்டுகளிலும் மற்றும் 250 மைல் வேகத்தில் இருந்து 0 மைல் வேகத்தை 8.25 செகண்டுகளிலும் எட்டி அந்த கார் சாதனைப் படைத்து உள்ளது.

இந்த அனைத்து சாதனைகளும் ஒரே நாளில் கோனிக்செக் ரெகெரா காரால் படைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. சுவீடன் நாட்டின் தலைநகரமான ஸ்டாக்ஹோல்ம்-இல் உள்ள ஓரிப்ரோ விமான நிலையத்தில் வைத்தே கோனிக்செக் ரெகெரா சூப்பர் கார் இந்த சாதனைகளைப் படைத்திருக்கின்றது. அது 0-400-0 kph சாதனையைப் படைக்க ரெகெராவைக் காட்டிலும் 1 செகண்டுக்கும் அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டது. 29.93 செகண்டுகளையே அது எடுத்துக் கொண்டது. இதைவிட குறைவான நேரத்தில் 0-400-0 kph இலக்கை கோனிக்செக் ரெகெரா எட்டியதால், விரைவில் அதிக வேகத்தை எட்டும் கார் மற்றும் விரைவான நிறுத்தத்தை வழங்கும் கார் ஆகிய இரு பிரிவுகளின் முடி சூடா மன்னனாக அது மாறி இருக்கின்றது.

கோனிக்செக் ரெகெரா சூப்பர் காரின் மதிப்பு ரூ.16.4கோடி ஆகும். இந்த காரில் வி8 மோட்டார் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த இரண்டும் சேர்ந்து 1,500எச்பி பவரை வெளியேற்றும். இ85 ரக ஃப்யூவலில் மட்டுமே இந்த கார் இயங்கும். இந்த காரில் எனர்ஜி இழப்பை தவிர்க்கும் விதமாக கோனிக்செக் நிறுவனம் கேடிடி சிஸ்டத்தை பயன்படுத்தி இருக்கின்றது. இது வழக்கமான சிவிடிகளைக் காட்டிலும் அதிக சிறப்பானது ஆகும்.

Maha

Next Post

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்..!! பிரபல நிறுவனத்தின் அசத்தல் திட்டங்கள்..!!

Sun Jun 18 , 2023
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் Vi நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக, ஓர் ஆண்டுக்கு செல்லுபடியாகும் 365 ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி மொபைல் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100 எஸ்.எம்.எஸ் இலவசம், […]

You May Like