fbpx

#சென்னை: இறுதி சடங்கிற்கு சென்ற உறவினர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாப உயிரிழப்பு..!

சென்னை மாநகர பகுதியில் உள்ள கொத்திமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் ரவியின் மகனான  ராபின்(24) எனபவர் ஊர்க்காவல் துறையில் படை வீரராக வேலை பார்த்து வந்திருக்கிறார். இவர் நேற்று முன்தைய தினத்தில் ராபின் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

நீண்ட நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டதால் ராபின் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர். இவரின் உறவினரான ராமச்சந்திரன்(47) என்பவர் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார்.

இந்த நிலையில் மின் விளக்கு எரிவதற்கு மின் இணைப்பு கொடுத்துள்ளார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி ராமச்சந்திரனும், மற்றும் அருகில் வசிக்கும் ராஜா என்பவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 

இதனை தொடர்ந்து இருவரையும் உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் ராமச்சந்திரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இது பற்றி காவல்துறையினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

திடீரென உயிரிழந்த விஜய் டிவி பிரபலம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Thu Dec 15 , 2022
பிரபல சீரியல் இயக்குனர் தாய் செல்வம் உயிரிழந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர். மற்ற தொலைக்காட்சி சீரியல்களை விட விஜய் டிவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவது வழக்கம். 💔 உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்..#RIPDirectorThaiSelvam#KaathuKaruppu #Thaayumaanavan #KalyanamMudhalKaadhalVarai #MounaRaagam Season 1#NaamIruvarNamakkuIruvar#PaavamGanesan#EeramaanaRojaave Season 2 pic.twitter.com/CYFDVCHnVK — Vijay Television (@vijaytelevision) December 15, 2022 அந்த […]

You May Like