திருவண்ணாமலை அருகே, துக்க நிகழ்ச்சிக்கு வந்தபோது இறந்தவரின் உடலை வைக்கும் ப்ரீசர் பாக்ஸில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, ஷாக் அடித்து, தூக்கி வீசப்பட்ட 15 உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், கக்கனூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி, எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு, அவருடைய உறவினர்கள் அனைவரும் அவரின் துக்க நிகழ்வுக்கு, அவருடைய வீட்டிற்கு வந்து, அவர் உடலை பார்த்து கதறி அழுது கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் சிறுமியின் உடல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான், அந்த குளிர்சாதன பெட்டியில் திடீரென்று மின்சாரம் பாய்ந்துள்ளது. இதன் காரணமாக, அந்த சிறுமியின் உடலை பார்த்தவாறு, குளிர்சாதன பெட்டியின் மீது, படுத்தவாறு அழுது கொண்டிருந்த 15 பெண்களின் மீது, திடீரென்று மின்சாரம் தாக்கி, அவர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதைக் கண்ட உறவினர்கள் அனைவரும், அதிர்ச்சியில் உறைந்து உடனடியாக மின்சாரத்தை துண்டித்து, அவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். துக்க நிகழ்ச்சியை அனுசரிப்பதற்காக சென்ற நபர்கள் மீது, மின்சாரம் பாய்ந்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம், திருவண்ணாமலை வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.