fbpx

மகிழ்ச்சி செய்தி…! தென்மாவட்ட மக்களுக்கு இன்று முதல் நிவாரணத் தொகை ரூ.6,000 வழங்கப்படும்…!

மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு இன்று முதல் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு .

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை,வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இந்த 2 மாவட்டங்களின் இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். மக்களுக்கு இன்று முதல் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அளிக்கப்படும் நிவாரண தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த நாட்டு படகுகளுக்கு ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும், விசைப் படகுகளுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாகவும் நிவாரண தொகை உயர்த்திவழங்கப்படும். பயிர், கால்நடைகள், கட்டுமரங்களுக்கான நிவாரண தொகையும் உயர்த்தி வழங்கப்படும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இந்த மாவட்டங்களில் உள்ள இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000 வழங்கப்படும்.

Vignesh

Next Post

அடிதூள்...! SMS வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்...! எப்படி தெரியுமா...?

Sat Dec 30 , 2023
குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் செலுத்தும் புதிய வசதியை மின் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் மின்நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தைச் செலுத்த நேரடியாக மட்டுமின்றி, இணையதளம் மற்றும் செயலி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மின்வாரியம் செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி கைப்பேசியில் மின்வாரியம் மூலம் வரும் அதிகாரப்பூர்வ […]

You May Like