மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் உருவான மாண்டஸ் புயல் காரணமாக சென்னை,செங்கல்பட்டுமற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு வலை, மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்தன அவ்வாறு சேதமடைந்த மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை ஆய்வுக்குழு ஆய்வுசெய்து.
அதனடிப்படையில் சேதமடைந்த விசைப்படகு, நாட்டுப்படகு வலை மற்றும் இயந்திரங்களுக்கும் நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு கருத்து அணுப்பப்பட்டு நிவாரணம் பெற்று வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
