பாலக்காட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 41 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சார்ந்த தச்சங்கரை என்னும் ஊரில் மதரசா ஆசிரியராக இருந்தவர் ஹம்சா வயது 51. இவர் அங்கு மத படங்கள் கற்க வந்த 10 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையை இது தொடர்பாக தீவிரவாக விசாரணை செய்தது. விசாரணையின் முடிவில் ஆசிரியர் ஹம்சா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார் அவருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மேலும் அந்த நபருக்கு எதிரான சாட்சியங்களும் வலுவாக இருந்தன. இந்நிலையில் இந்த வழக்கானது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது சிறப்பு நீதிமன்றம். இதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஹம்சாவின் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு எதிரான சாட்சியங்கள் மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 41 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு விதமான அமைப்புகளும் பாராட்டுகளை தெரிவித்திருக்கின்றன. சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் எந்தக் கொடுமைகளுக்கும் பாரபட்சம் இன்றி தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் இந்த தீர்ப்பை பாராட்டி இருக்கின்றனர்.