fbpx

தூக்கமின்மையால் கஷ்டப்படுறீங்களா.! படுத்து சில நிமிடங்களிலேயே தூங்க இதை சாப்பிடுங்க போதும்.!?

பொதுவாக முன்னோர் காலத்திலிருந்து தற்போது வரை நம் இந்திய உணவு என்பது ஆரோக்கியமானதாகவும், மருத்துவ குணமிக்கதாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக உணவின் சுவைக்காகவும், மருத்துவ குணத்திற்காகவும் சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வரும் பொருள்தான் கசகசா. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1. கசகாசவில் லினோலிக் என்ற அமிலம் உள்ளது. இது தோலுக்கு பளபளப்பையும், ஈரப்பதத்தையும் தருகிறது.
2. கசகசாவில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது மூளைக்கு சுறுசுறுப்பை அளித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
3. நியாபக சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு கசகசாவை உணவில் சேர்த்து கொடுக்கலாம். இது மூளையின் மங்கும் திறனை குறைக்கிறது.
4. நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் இது செரிமானத்தை சரி செய்து மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படாமல் தடுக்கிறது.
5. உடல் வெப்பத்தினால் கஷ்டப்படுபவர்களுக்கு கசகசா ஒரு அருமருந்தாக இருந்து வருகிறது.
6. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்த பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்கள் கசகசாவை உணவில் எடுத்துக் கொண்டால் மன அழுத்தம், மனப்பதட்டம் குறையும்.
7. குறிப்பாக பலருக்கும் தூக்கமின்மை மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. கசகசாவை பாலில் கலந்து தினமும் இரவில் குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும். படுத்த ஒரு சில நிமிடங்களிலேயே தூங்கி விடலாம்.
8. நாட்டு சக்கரை, தேங்காய் துருவல், கசகசா சேர்த்து சாப்பிட்டு வர வாய்ப்புண் மற்றும் வயிற்றில் ஏற்பட்டுள்ள புண்கள் சரியாகும்.
9. தோல் நோய்கள் மற்றும் அம்மை நோய் தழும்புகள் சரியாக கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை, கசகசா மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து பாலில் கலந்து தடவி வந்தால் தோல் நோய்கள் மற்றும் அம்மை நோய் தழும்புகள் சரியாகும்.
10. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரி செய்ய கசகசாவை தேனில் கலந்து சாப்பிடலாம். இது உடனே வயிற்றுப்போக்கை சரி செய்யும். இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய கசகசாவை உணவில் சேர்த்துக்கொண்டு பல்வேறு நோய்களை தீர்க்கலாம். ஆனால் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

’சோஷியல் மீடியாவில் இதை மட்டும் செய்யாதீங்க’..!! 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!! புதிய சட்டம்..!!

Thu Jan 25 , 2024
இலங்கை நாட்டில், சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. அண்டை நாடான இலங்கையில், கடந்த 2022ஆம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள மக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் சமூக வலைதளங்களை முக்கிய கருவியாக பயன்படுத்தினர். இதனால் அப்போதைய அதிபர் ராஜபக்சேவை பதவி விலகச் செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்தியது. இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் […]

You May Like