fbpx

சிறுமியின் உள்ளாடைகளை கழற்றுவது பலாத்காரம் ஆகாது…! உயர் நீதிமன்றம் தீர்ப்பு…!

மைனர் பெண்ணின் உள்ளாடைகளை கழற்றிவிட்டு, நிர்வாணமாக இருப்பது ‘கற்பழிப்பு முயற்சி’ ஆகாது, ஆனால் அது பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைக்கும் குற்றமாக கருதப்படும் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் சுவாலால். கடந்த 1991ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தோடரைசிங் என்பவரின் 6 வயது பேத்தியை இரவு 8 மணி அளவில் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சுவாலால் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியின் ஆடை, உள்ளாடைகளை வலுக்கட்டாயமாக கழற்றி நிர்வாணமாக்கி உள்ளார். அப்போது சிறுமி கத்தி கூச்சல் எழுப்பியதால் சுவாலால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பான வழக்கில் டோங்க் மாவட்ட நீதிமன்றம் சுவாலால் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக கூறி தீர்ப்பளித்தது. இதையடுத்து சுவாலால் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி அனுப்குமார் தாண்ட் விசாரித்து 33 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10-ம் தேதி அன்று தீர்ப்பு அளித்தார். அதில்,’ சிறுமியின் உள்ளாடைகளை கழற்றிவிட்டு, நிர்வாணமாக்கியது பலாத்கார முயற்சி ஆகாது. ஆனால் அது பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைக்கும் குற்றமாக கருதப்படும். ஏனெனில் சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி முற்றிலும் நிர்வாணப்படுத்துவது, பலாத்கார முயற்சி தொடர்பான இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 மற்றும் பிரிவு 511 இன் கீழ் வராது.பலாத்கார முயற்சி என்றால் குற்றம் சாட்டப்பட்டவர், ஆடைகளை கழற்றியதையும் தாண்டி அப்பால் சென்றிருக்க வேண்டும் என கூறினார்.

English Summary

Removing Girl’s Innerwear, Undressing Oneself Not ‘Attempt To Rape’ But Indecent Assault: Rajasthan High Court

Vignesh

Next Post

தனிமை கிடைக்கும்போதெல்லாம் மருமகனுடன் மஜா செய்த மனைவி..!! கட்டில் சண்டையை நேரில் பார்த்த கணவர்..!! கிருஷ்ணகிரியில் ஷாக்..!!

Thu Jun 13 , 2024
The incident of the husband stabbing his wife who was having an affair with her son-in-law has caused a great shock.

You May Like