ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸ், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். தமிழக கேடர் ஐ.ஏ.எஸ் அதிகரியான சக்திகாந்த தாஸ், தமிழக அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றி இருக்கிறார். மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றிய சக்திகாந்த தாஸ், இந்தியாவின் பதினைந்தாம் நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும், ஜி 20 இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்பப்பட்டார். இவர் ரிசர்வ் வங்கியின் 25 ஆவது கவர்னராக உள்ளார். இவரது பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருந்தநிலையில், மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. தற்போது 67 வயது ஆகும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநராக திறம்பட செயலாற்றி வரும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
Read more : தீவிரமாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டெல்டா மாவட்டங்களுக்கு கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு..!!