சீனா நாட்டில் ஷாங்காய் என்ற பகுதியில் ஹுவாங் என்ற பெண் காரமான உணவுகளை அருந்திக் கொண்டிருந்துள்ளார். அச்சமயத்தில் தொடர்ந்து அவர் இருமிக் கொண்டே இருந்துள்ளார். இவ்வாறு இருமிக்கொண்டே இருந்ததால் உடலின் மார்பு பகுதியில் ஏதோ எலும்பு முறிந்ததை போன்ற சில சத்தத்தை அவர் கேட்டதாக கூறியுள்ளார்.
இதனை முதலில் எளிதாக எடுத்துக் கொண்டார். ஆனால் தொடர்ந்து தன்னால் பேச முடியாமலும், மூச்சு விடும் போது மார்பு பகுதியில் வலியையும் ஹுவாங் உணர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனிடையே அவரை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
அதற்கான காரணம், ஹுவாங்கின் உடலில் நான்கு விலா எலும்புகள் உடைந்துள்ளது என ஸ்கேனில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சரிசெய்ய அவரது மார்புப் பகுதியில் கட்டு போட வேண்டும் என்றும் மேலும் ஒரு மாத காலம் ஓய்வெடுத்தால் மட்டும் தான் குணமடைய முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஹுவாங் உடல் மெலிந்து இருப்பதால் இருமல் ஏற்படும் போது இதனை தாங்காமல் விலா எலும்புகள் உடைந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..