fbpx

இந்த ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்வு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்துவிதமான தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் 16,000 ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் 60 வயது வரை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் செப்.10-ம் தேதி அறிவித்தார். அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பகுதி நேர பயிற்றுநர்கள், பாதுகாவலர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நடப்பாண்டு செப்டம்பர் முதல் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தி ஆணையிடப்படுகிறது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் வட்டாரவள மையங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்றூம் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

எரிமலை வெடிப்பால் உண்டான மாற்றம்: பசுபிக் பெருங்கடல் பகுதியில் உண்டாகும் புதிய தீவு..!!

Wed Sep 28 , 2022
பூமியும் அதன் நிலப்பரப்புகளும் மில்லியன் கணக்கான வருடங்களில் உருவாகி இருக்கின்றன. சில நேரங்களில் டெக்டோனிக் தகடுகளின் இயக்கத்தால் உண்டாகும் பூகம்பங்களால் முழு மலைத்தொடர் உருவாகி இருக்கிறது. சில நேரங்களில், எரிமலை வெடிப்பு புதிய தீவுகளை உண்டாக்கும். விஞ்ஞானிகள் தற்போது ஏற்பட்ட ஒரு எரிமலை வெடிப்பால் உண்டான புவியியல் மாற்றத்தால் மத்திய டோங்கா தீவுகளில் ஒரு “குழந்தை” தீவைக் கண்டுபிடித்து இருக்கின்றனர். அது தற்போது ஆரம்ப நிலையில் உள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். […]

You May Like