பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் ) ஆகியோர் மடிக்கணினியுடன் மற்றும் கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்குமாறு அலுவலர்கள் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்த கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.