fbpx

ரிமல் புயல் எதிரொலி!! தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிவிட்டது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் என்றும் இது புயலாக மாறினால், ரிமல் என்று பெயரிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 26ஆம் தேதி வங்கதேசத்தை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இது மேலும் தீவிரமடைந்து, வடக்கு – வடகிழக்கு திசையில், மேற்கு வங்க மற்றும் வங்கதேச கடற்கரையை நோக்கி நகரும் என்றும் கூறியுள்ளார். இதனால், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அடுத்த 3-4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.இதனிடையே, தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கூறி, அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More: Nayanthara | வல்லன் படத்தில் சிம்புவுடன் நயன்தாரா காட்டிய வித்தைக்கு இவ்வளவு சம்பளமா..?

Rupa

Next Post

கொத்தாக சிதறிய உடல்கள்!… ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து!… பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

Fri May 24 , 2024
Chemical Factory Fire: தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள டோம்பிவிலி எம்ஐடிசி பகுதியின் 2 ஆம் கட்டத்தில் அமைந்துள்ள அமுதன் கெமிக்கல்ஸில் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டதையடுத்து, மளமளவென தீப்பிடித்து, அருகில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு பரவியது. இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 8 […]

You May Like