fbpx

அதிமுக அலுவலகத்தில் கலவரம், ஆவணம் திருட்டு..! 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர், அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் வந்த பிரச்சார வாகனத்தில் ஏற்றினர். இதையடுத்து, அங்கு பெரும் பதற்றம் நிலவியதால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது: ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு  வருவாய்த்துறை திடீர் நோட்டீஸ்

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மீது ராயப்பேட்டை காவல்நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் அளித்துள்ள புகாரில், அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முக்கிய ஆவணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் வந்த வாகனத்தில் கொண்டு சென்று விட்டதாகவும், அதனை மீட்டு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக அலுவலக கலவரம்: 400 பேர் மீது வழக்குப்பதிவு- Dinamani

இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பாக நடந்த கலவரம் தொடர்பாக 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 200 பேர் மீதும், எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Chella

Next Post

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு... முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் மீண்டும் விசாரணை...

Tue Jul 12 , 2022
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம். இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் காவல்துறையினர் மறு விசாரணை நடத்தியதால் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது.. இதையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. உதகை ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் இதுவரை 217 பேரிடம் விசாரணை […]

You May Like