Central Govt: மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தங்களது பணி நேரத்தின் போது அணிகலன்கள் அணிவதற்கு மத்திய அரசு தடை விதித்து இருக்கிறது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் பணியின் போது முழங்கைக்கு கீழ் அணிகலன்கள் அணிய கூடாது என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் நோயாளிகள் இருக்கும் பகுதி அவசர சிகிச்சை பிரிவு அறுவை சிகிச்சை அறை போன்ற இடங்களில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் செல்போன்கள் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை ஒரு பக்க அளவில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை மத்திய அரசின்(Central Govt) கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் முழங்கை கீழ் அணியும் வாட்ச் பிரேஸ்லெட் வளையல்கள் மோதிரம் மற்றும் மத அடிப்படையிலான கயிறுகள் ஆகியவை உடலில் இருக்கும் நுன்கிருமிகள் பல மடங்கு பெருகுவதற்கு வழி வகுக்கிறது.
மேலும் நோயாளிகள் இருக்கும் அரை அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அறை ஆகியவற்றில் செல்போன்கள் பயன்படுத்துவதால் நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் இருப்பதால் மொபைல் போன்கள் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த புதிய கட்டுப்பாடு உடனடியாக அமல்படுத்தப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் பணியின்போது கைக்கடிகாரத்தின் அவசியம் இருப்பதால் எனது தொடர்பாக சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேன்சட் மருத்துவ இதழில் ‘ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு: மனிதகுலத்திற்கு உலகளாவிய அச்சுறுத்தல்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் மருத்துவமனை சார்ந்த எதிர்ப்பு நோய் தொற்றுக்களால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது.
அந்த கட்டுரையின்படி மருத்துவ சேவை பெறும் போது நோயாளிகள் புதிய தொற்றுக்கு ஆளாகும் அபாயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளின் சிகிச்சை காலம் மற்றும் மருத்துவமனையில் தங்கும் நேரம் அதிகரிக்கும். மருத்துவ செலவும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. சில நேரங்களில் இந்த நோய் தொற்றுகள் உயிருக்கே அபாயமாக அமையலாம் இந்த குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.