விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி கோபியை எப்படி சமாளிப்பது என்று யோசித்து வருகிறார் பாக்கியலட்சுமி.அந்த சமயத்தில் தாத்தா அவருடைய மொத்த சொத்தையும் எழுதி வைத்து விடுவதாக தெரிவித்து அதற்கு பதிலாக வீட்டை மட்டும் கொடுத்து விடுமாறு கோபியிடம் கேட்கிறார், இதற்கு கோபியும் சம்மதம் தெரிவிக்கிறார்.
அடுத்தடுத்து வரும் நாட்களில் பாக்கியலட்சுமி மற்றும் அமிர்தா உள்ளிட்டோர் இணைந்து ஒரு திருமணத்திற்கு சமையல் ஒப்பந்தம் எடுத்து செய்வதை போல காட்சிகள் வருகிறது. அதன் படப்பிடிப்பில் ஒரு வீடியோவை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் நடிகை ரித்திகா.
அந்த வீடியோவில் என்னை அவருடைய மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு சமையல் வேலைக்கு ஆள் எடுத்து விட்டார் என்று நகைச்சுவையாக பாக்கியாவின் மீது புகார் வழங்கியிருக்கிறார் அமிர்தா, அதன் வீடியோ இதோ.