நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண் தனக்கு சாலை வரி, ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்கவும், காரை பதிவு செய்யவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பஆஷா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. உடல் ஊனமுற்றவர்களுக்கு வழங்குவது போல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் கார் வாங்கும் போது சாலை வரி, ஜிஎஸ்டி வரி விலக்கு சலுகை வழங்க வேண்டும் என மனுதாரர் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதி பார்வையற்றவர்கள் உட்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கார் வாங்குவதற்கு ஜிஎஸ்டி, சாலை வரி, டோல் கட்டண விலக்கு வழங்க விதிகளில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் அரசு துறைகளில் பணிபுரிகின்றனர்.
அவர்கள் பணியிடங்களுக்கு செல்வது பெரிய சவாலாக உள்ளது. இதனால் மனுதாரரிடம் உறுதிமொழி கடிதம் வாங்கிக்கொண்டு 4 வாரத்தில் மோட்டார் வாகன வரி மற்றும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.