fbpx

கவனம்: RPF-ல் மொத்தம் 19,800 கான்ஸ்டபிள் காலி பணியிடங்கள் அறிவிப்பு…! தியாக பரவும் செய்தி… உண்மை என்ன…?

ரயில்வே பாதுகாப்புப் படையில் 19,800 கான்ஸ்டபிள் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்தி மற்றும் சில செய்தித்தாள்களில் வெளியான செய்தி போலியானது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; ரயில்வே பாதுகாப்புப் படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் ஒரு கற்பனையான செய்தி பரப்பப்படுகிறது. ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலம் அத்தகைய அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்று இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது” என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு அல்லது தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் RRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே பார்க்க வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அடுத்த பயங்கரம்...! காபூலில் குண்டு வெடிப்பு... 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல்...! மீட்பு பணி தீவிரம்...!

Thu Jan 12 , 2023
ஆப்கானிஸ்தானின் காபூலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள தலிபான் தலைமையிலான வெளியுறவு அமைச்சகத்தின் கட்டிடத்தின் முன் நேற்று பிற்பகல் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக டோலோ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. “காபூலில் வெளியுறவு அமைச்சகத்தின் முன் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் இறந்ததாகக் கூறப்படுகிறது. காபூல் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் தனது […]
பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க மனித வெடிகுண்டாக மாறிய நபர்..? காவல்துறையை அலறவிட்டவர் அதிரடி கைது..!

You May Like