fbpx

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000!… இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழகம் முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 அதாவது இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தில் 1.6 கோடி பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ள நிலையில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதா அல்லது ஏற்கப்பட்டதா என்பது குறித்த எஸ்எம்எஸ் பயனாளர்களின் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

அதனைப் போலவே பயனாளிகளின் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தி வரவு வைக்கப்பட்டது. இதனை பயனாளர்கள் அனைவரும் உடனே சரிபார்த்துக் கொள்ளும் படியும் ஒரு வேளை எஸ்எம்எஸ் வரவில்லை என்றால் ரேஷன் கடைகள் அல்லது இ சேவை மையத்திற்கு நேரில் சென்று மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதிக்கு பிறகு இந்த திட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு மேல் முறையீடு செய்யலாம் எனவும் அதன் பிறகு 30 நாட்களுக்குள் இதற்கு தீர்வு காணப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் வங்கி கணக்கில் இன்று மாலைக்குள் ஆயிரம் ரூபாய் பணம் வந்து சேரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

மகளிர் உரிமைத்தொகை வரவில்லையா...? உடனே இந்த எண்ணுக்கு கால் பண்ணுங்க...! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!

Fri Sep 15 , 2023
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்க சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்க விழா இன்று முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டம் குறித்த செயல்பாடுகள் தொடர்பாக தகவல்கள் வழங்கிடவும், பொதுமக்களின் கோரிக்கைகள் அல்லது குறைகள் இருப்பின் […]

You May Like