fbpx

வந்தாச்சு அறிவிப்பு…! தொழிற் பயிற்சி பெறும் 12-ம் மாணவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை…! முழு விவரம் இதோ…

தொழிற் பயிற்சி பெறும் 12-ம் மாணவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1,000 ஊக்கத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, அகப்பயிற்சி மேற்கொள்ளும் 12-ம் வகுப்பு மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்கள் பெற வேண்டும். மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழிற் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்கள் உட்பட விவரங்களை www.tnemis.tn.schools.gov.in இணையதளத்தில் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த விவரங்கள வட்டார வளமைய மேற்பார்வையாளர்களால் சரிபார்க்கப்பட்டு, அதன்பின் நிதியானது விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

PM Kissan திட்டத்தில் உங்களுக்கு ரூ.2,000 பணம் வரவில்லையா...? வரும் 16-ம் நடைபெறும் சிறப்பு முகாம்...!

Tue Feb 13 , 2024
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிப்ரவரி 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 16.02.2024 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் […]

You May Like