fbpx

சூப்பர்…! ஆண்டுக்கு ரூ.12,000 கல்வி உதவித் தொகை…! 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

2023-24 ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் சமர்ப்பித்தல் / பதிவு ஆகியவை 2023, அக்டோபர் 1 அன்று தொடங்கியது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்காக கல்வி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ‘தேசிய வழிமுறைகள் மற்றும் தகுதி உதவித்தொகை திட்டத்தின்’ கீழ், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பில் இடைநிற்றலைக் குறைக்கவும், இடைநிலைக் கட்டத்தில் தங்கள் கல்வியைத் தொடர ஊக்குவிக்கவும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாநில அரசு, அரசு உதவிபெறும் மற்றும் உள்ளாட்சிப் பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் புதிய கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.12,000 ஆகும். தேசிய கல்வி உதவித்தொகை திட்டம் தேசிய உதவித்தொகை இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.3,50,000-க்கு மிகாமல் உள்ள மாணவர்கள் இந்த உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் ஆவர். இதற்கானத் தேர்வில் கலந்து கொள்ள மாணவர்கள் ஏழாம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான தரத்தை பெற்றிருக்க வேண்டும் (எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு 5% தளர்வு). விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான மற்றும் பதிவு செய்வதற்கான நடைமுறை 2023 அக்டோபர் 1 அன்று தொடங்கியது. கடைசி தேதி நவம்பர் 30 ஆகும்.

Vignesh

Next Post

தீபாவளி போனஸ்..!! மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் அறிவிப்பு..!!

Thu Oct 5 , 2023
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அக நிவாரணப்படி உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான 2ஆம் கட்ட அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவராத்திரி, தீபாவளி என பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க […]

You May Like