நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளான் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ வேளாண்மை செழித்து வளரும் திட்டங்களை வகுக்க தனி பட்ஜெட்டை அரசு உருவாக்கி உள்ளது.. அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். மண்ணின் தன்மைக்கேற்ற பயிர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன..” என்று தெரிவித்தார்.. இதை தொடர்ந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
- நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது..
- 25 உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது..
- உழவர் சந்தைக்கு வரும் உழவர்களுக்கு சிற்றுண்ட், மூலிகை சூப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
- பனை சாகுபடியை ஊக்குவித்து பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு
- விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்
- விவசாயிகளுக்கு வேளான் இயந்திரங்கள், வாடகை மையங்கள் உள்ளிட்டவை வழங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு
- காவிரி நீர் கடைமடைக்கும் சென்று சேர 1,146 கி.மீ தொலைவு வாய்க்கால்களை தூர்வார ரூ.5 கோடி ஒதுக்கீடு
- அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மதுரை செங்கரும்பு, சாத்தூர் வெள்ளரி, வீரமாங்குடி அச்சு வெல்லம், விளாத்திக்குளம் மிளகாய், கோட்டை மலை கத்திரி, சிவகங்கை கருப்பு கவுனி, மூலனூர் குட்டை முருங்கை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்
- ஆண்டு முழுவதும் தக்காளி, வெங்காயம் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. தக்காளி சீராக கிடைக்க 19 கோடியும், வெங்காயம் சீராக கிடைக்க ரு.29 கோடியும் ஒதுக்கீடு
- நுண்ணீர் பாசன திட்டம் நிறுவதற்கு மானியமாக ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு
- ரூ.3 கோடியில் பூச்சிகள் அருங்காட்சியங்கள் மேம்படுத்தப்படும்
- வெளிநாட்டு வேளான் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள விவசாயிகளுக்கு அயல்நாட்டில் பயிற்சி அளிக்கப்படும்..
- இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்து சென்று விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்..
- வெளிநாட்டு வேளாண் முறையை அறிந்து நமது மாநிலத்தில் பின்பற்றும் வகையில் பயிற்சி பெற ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
- பள்ளி மாணவர்களுக்கு விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பண்ணை சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.
- ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- 3-4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்; ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி நியமனம்.
- நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள் உற்பத்திக்கு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு
- 4300 ஹெக்டேரில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது; மதுரை மல்லிகை இயக்கத்துக்கு ரூ7 கோடி ஒதுக்கீடு
- கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ195 ஊக்கத் தொகை; கூட்டுறவு சர்க்கரை ஆலை கழிவுகளில் இயற்கை உரம் தயாரிக்க ரூ3 கோடி நிதி.
- ரூ. 33 கோடியில் எண்ணெய் வித்துக்களுக்கான சிறப்பு மண்டலம் திட்டம்.
- உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்-2.0 செயல்படுத்தப்படும்.
- கோயம்புத்தூர் மாவட்டத்தில் கருவேப்பிலை தொகுப்பு.
- ரூ. 12 கோடியில் பருத்தி உற்பத்தியை பெருக்குவதற்கு நடவடிக்கை.
- சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ₹3 கோடி நிதி ஒதுக்கீடு.
- தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க நடவடிக்கை.
- தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.19 கோடி ஒதுக்கீடு; வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ. 29 கோடி ஒதுக்கீடு.
- தேனி, திண்டுக்கல்,கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 எக்டரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு.