கிராமப்புறங்களில் உணவுப்பதப்படுத்துதல் தொழிலை ஊக்கப்படுத்த மத்திய தொழில் துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தின் கீழ் உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறைக்கான மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது.
உணவுப்பதப்படுத்துதல் தொழில்களின் திறனை அதிகரிக்கவும் ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவை மேம்படுத்தவும், பிரதமரின் கிசான் சம்பதா திட்டம், உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம், பிரதமரின் குறு உணவுப்பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பிரதமரின் குறு உணவு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டங்களின் கீழ் உணவுப் பதப்படுத்துதல் நிறுவனங்களை அமைக்க அல்லது மேம்படுத்த கடனுடன் இணைந்த மானியத்திட்டமாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. பிரதமரின் கிசான் சம்பதா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், குளிர்பதன வசதிகளை அமைக்கவும், தொழில்முனைவோருக்கு நிதி ஆதரவு அளிக்கப்படுகிறது.