fbpx

பொங்கல் தொகுப்புடன் ரூ.2,000 ரொக்கப் பணம்…! உயர் நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு…!

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கரோனா ஊரடங்கின்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கமாக வழங்கப்பட்டது. அதன்பிறகு திமுக ஆட்சி்க்கு வந்ததும் ரொக்கப்பணம் ஏதுமின்றி பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ரொக்கப்பணம் ஏதுமின்றி பொங்கல் பரிசுத்தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏழை, எளிய விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக வழக்கறிஞரான ஏற்காடு ஏ.மோகன்தாஸ் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

English Summary

Rs. 2,000 cash with Pongal package…! BJP files case in High Court

Vignesh

Next Post

ஒரு ஸ்பூன் போதும்..! புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கலாம்..

Fri Jan 3 , 2025
health benefits of consuming pepper

You May Like