பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பலன் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின் 11-வது தவணை கடந்த மே மாதம் 31-ம் தேதி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது..
இதனிடையே 11வது தவணைக்கு முன் e-KYC செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. முன்னதாக இ-கேஒய்சிக்கான கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்தது, பின்னர் இந்த கால அவகாசம் ஜூலை 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.. அதாவது ஆகஸ்ட் 31 வரை கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. எனவே, தகுதியான விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்ட பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ. 2000ஐப் பெறுவதற்குத் தங்கள் e-KYC -ஐ முடித்திருக்க வேண்டும். இதன் மூலம் இந்த திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற முடியும்.
eKYC செயல்முறையை முடிக்க படிப்படியான செயல்முறை
- படி 1: PM Kisan அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – https://pmkisan.gov.in/
- படி 2: முகப்புப் பக்கத்தின் வலது பக்கத்தில், eKYC விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- படி 3: உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு search என்பதை கிளிக் செய்யவும்
- படி 4: உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- படி 5: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
eKYC வெற்றிகரமாக இருக்க, உங்களின் அனைத்து விவரங்களும் பொருந்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் உள்ளூர் ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். குறிப்பாக, விவசாயிகள் அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று eKYC ஆஃப்லைனில் முடிக்க முடியும். அவர்களின் KYC சரிபார்ப்பை முடிக்க அவர்கள் தங்கள் ஆதார் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.