ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2023-2024 ஆம் நிதி ஆண்டில், ரூ.1000/- முதல் ரூ.25, 000/- வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் https://scholarships.gov.in என்ற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாணவருக்கும், மைய வங்கி அமைப்பு (கோர் பேங்கிங்) என்ற தொழில்நுட்பமுறையைக் கொண்டுள்ள, தேசியமயமாக்கப்பட்ட வங்கி/பட்டியலிடப்பட்ட வங்கியில் தங்களுக்கென தனியாக உள்ள சேமிப்புக் கணக்கு தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை, தங்களின் சேமிப்பு வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.
இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணினைப் பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும். பதிவு செய்யப்படாத பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், https://scholarships.gov.in என்ற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், முதலில் பதிவு செய்தல் வேண்டும். பின்பு, மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில், குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை, கல்வி நிறுவனங்கள், மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல், அடுத்தகட்ட சரிபார்க்கும் முறைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது.
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30/11/2023 மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31/12/2023 ஆகும். மேற்கொண்டு விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா, கிண்டி, சென்னை – 600032. மின்னஞ்சல் – wclwo.chn-mole@gov.in, தொலைபேசி எண்: 044-29530169