நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக இளைஞர் நாடாளுமன்றப் போட்டிகளை நாடாளுமன்ற விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது.
இளைஞர்களிடையே ஜனநாயக ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக, நாடாளுமன்ற விவகார அமைச்சகம் 1966-67 முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்காக பின்வரும் இளைஞர் நாடாளுமன்றப் போட்டிகளை அந்தந்தப் பங்குதாரர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து நடத்துகிறது.
தேசிய தலைநகர் டெல்லி கல்வி இயக்குநரகம் மற்றும் புது டெல்லி மாநகராட்சியின் கல்வித் துறை கீழ் உள்ள பள்ளிகளுக்கான இளைஞர் நாடாளுமன்றப் போட்டி; கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்ற போட்டி, ஜவஹர் நவோதயா பள்ளிகளுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டி, பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டி, இவை தவிர, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இளைஞர் நாடாளுமன்ற போட்டிகளை நடத்த பின்வரும் வரம்புகளின்படி நாடாளுமன்ற விவகார அமைச்சகம் நிதி உதவி அளிக்கிறது. போட்டி முடிந்தவுடன் பெறப்படும் கோரிக்கைகளுக்கு உட்பட்டது.
100 வரை உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றங்களுக்கு ஆண்டொன்றுக்கு ஒரு சட்டமன்றத்திற்கு ரூ.3 லட்சம்; 100க்கும் 200- க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றங்களுக்கு ஆண்டொன்றுக்கு ஒரு சட்டமன்றத்திற்கு ரூ.4 லட்சம்; 200க்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றங்களுக்கு ஆண்டொன்றுக்கு ஒரு சட்டமன்றத்திற்கு ரூ.5 லட்சம் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களில் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.