fbpx

சென்னை|35 லட்சம் ரூபாய் மோசடி செய்த கட்டுமான நிறுவன அதிபர் மனைவியுடன் அதிரடி கைது……!

சென்னை மடிப்பாக்கத்தில் இயங்கி வரும் யோகா பயிற்சி மையம் ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் லதா என்ற பெண்மணி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை வழங்கினார்.

அந்த புகார் மனுவில் காஞ்சிபுரம் வாஞ்சிவாஞ்சேரி வள்ளலார் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த நளினி(48) என்பவர் என்னுடன் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் அவர் தன்னுடைய கணவர் சங்கர் (54) கட்டுமான தொழில் செய்து வருவதாகவும் கீழ்கட்டளையில் கட்டுமான நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தி வருவதாகவும் தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு ராம் நகரில் 12 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி வீடுகள் கட்ட உள்ளதாக தெரிவித்து அதற்கான வரைபடத்தை நளினி ,அவருடைய கணவர் சங்கர் உள்ளிட்டோர் என்னிடம் காட்டினர். முதல் தளத்தில் 887 சதுர அடி கொண்ட பிளாட்டை குறைந்த விலை தருவதாக தெரிவித்து முன்பணமாக 35 லட்சத்தை பெற்றுக் கொண்டனர்.

ஆனால் அவர்கள் உறுதி அளித்தபடி பிளாட்டையும் கொடுக்கவில்லை, தன்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. ஆகவே சம்பந்தப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த புகாரில் அவர் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருக்கின்ற ஆவண மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ரேவதி விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில் லதா வழங்கிய புகார் உண்மைதான் என்று தெரிய வந்ததை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ஷங்கர், அவருடைய மனைவி நளினி உள்ளிட்டவரை நேற்று முன்தினம் கைது செய்தார். அதன் பிறகு அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.

தற்சமயம் கைது செய்யப்பட்ட சங்கர், மடிப்பாக்கம் பகுதிகளில் உள்ள பல வீடுகளை வாடகைக்கு எடுத்து அந்த வீடுகளை வீட்டின் உரிமையாளர்களுக்கே தெரியாமல் பலருக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் குத்தகைக்கு விட்ட வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

’எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பதிலேயே இருக்கிங்க’..!! நடிகை கீர்த்தி சுரேஷ்

Fri Jun 2 , 2023
‘எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பதிலேயே இருக்கிங்க’ என மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு […]

You May Like