fbpx

மக்களே..! வெயில் தாக்கத்தினால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் வழங்கப்படும்…! தமிழக அரசு அரசாணை வெளியீடு…!

வெப்ப அலையால் உயிரிழக்கும் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டு, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

வருவாய் நிர்வாக ஆணையர், தமிழக அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில்; தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 16 நகரங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸூக்கு மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூரில் 44 டிகிரி, வேலூரில் 43.7 டிகிரி, ஈரோட்டில் 43.6 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 31 நாட்கள், கரூரில் 26 நாட்கள், வேலூரில் 23 நாட்கள், தலைநகர் சென்னையில் 6 நாட்கள் 40 டிகிரி செல்சியஸூக்கு மேல் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

முதியோர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் உள்ளிட்டோரின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு வெப்ப அலை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வெப்ப அலை மேலாண்மை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தி, பல்வேறு துறைகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சமூக நல மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மருத்துவமனைகளில் போதுமான அளவு ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 1,038 தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டன.

எனவே வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவிக்க வேண்டும். பொருத்தமான அதிகாரம் கொண்ட அமைப்பால் ஆய்வு செய்து, வெப்ப அலையால் உயிரிழந்ததாக அறிவிக்கப்படும் பொதுமக்கள், வெப்ப அலை நிவாரண பணியின்போது ஈடுபடுத்தப்படும் பணியாளர்கள் ஆகியோருக்கு நிவாரணமாக, மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த கருத்துருவை கவனமாக பரிசீலித்த அரசு, வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து, வெப்ப அலையால் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது.

English Summary

Rs 4 lakh will be given in case of death due to heat stroke

Vignesh

Next Post

ஜம்முவில் ராணுவ ஆம்புலன்ஸ் மீது துப்பாக்கி சூடு!. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!. பாதுகாப்புப் படை அதிரடி!

Tue Oct 29 , 2024
Three Terrorists, Who Attacked Army Ambulance In Jammu-Kashmir, Killed In Encounter: Report

You May Like