fbpx

கொல்லி மலையில் இரவு வான் பூங்கா அமைக்க ரூ.44 லட்சம்…! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு…!

நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் இரவு வான் பூங்கா அமைப்பதற்கு ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையில் இரவு வானத்தின் உள்ளார்ந்த வனப்பை இயற்கை கலாச்சார மற்றும் வரலாற்று வளமாக அங்கீகரிக்கும் வகையில் ரூ.1 கோடி செலவில் ‘இரவு வான் பூங்கா’ அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதனை செயல்படுத்தும் வகையில், இரவு வான் பூங்கா அமைப்பதற்கு ரூ.44 லட்சம் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொல்லி மலைகள் தனித்துவமான புவியியல் மற்றும் காலநிலை அம்சங்களைக் கொண்டுள்ளன.

இதனால் இங்கு இரவு வன பூங்கா நிறுவுவதன் மூலம் ஒளி மாசுபாடு குறைவதோடு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பாதுகாப்பையும் ஒட்டுமொத்த பல்லுயிரியலையும் உறுதி செய்யும் என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இரவு வான் பூங்கா உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள், வானியல் புகைப்படக் கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Rs. 44 lakhs to set up a night sky park on Kolli Hill

Vignesh

Next Post

குளிர்காலத்தில் உங்கள் கைகள், கால்கள் கருமையாக மாறுகிறதா?. இந்த வீட்டுப்பொருட்களை பயன்படுத்துங்கள்!. மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்!

Wed Jan 29 , 2025
Do your hands and feet turn dark in winter? Use these household items! They will become soft and shiny!

You May Like