fbpx

விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செய்தி சேகரித்துவிட்டு திரும்பும்போது தடுப்புசுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர்(33) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் காரில் பயணித்த மூன்று பேரும் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த ஒளிப்பதிவாளர் சங்கரின் குடும்பத்திற்கு ஒரூ.5லட்சம் நிதியுதவியை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

இது குறித்த முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் “நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023) இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு.சங்கர் (வயது 33) என்பவர், சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். இளம் வயதில் உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் திரு.சங்கர் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 5 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

குடித்துவிட்டு மனைவியை பார்ப்பதற்காக வந்த கணவர்…..! வீட்டை விட்டு வெளியே போக சொன்ன மாமியார் இறுதியில் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!

Thu Aug 24 , 2023
மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகனை, வீட்டை விட்டு வெளியேற சொன்ன மாமியாரால், மனமுடைந்து, பிளேடால் தன்னை, தானே கிழித்துக்கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த சாஜித்பாஷா (42), ஆபிதாபேகம்(38) என்ற தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தான், சாஜித்பாஷா மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால், கணவன், மனைவி இடையே […]

You May Like