fbpx

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு…!

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு திட்டத்தின் கீழ், 13 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் விதமாக மூன்று பேருக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டம் ஜனவரி முதல் நடைமுறையில் உள்ளது.நவம்பர் மாதம் முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதத்துக்கான 13 வெற்றியாளர்களை கணினி குலுக்கல் முறையில், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேர்வு செய்தார். தேர்வானோருக்கு விரைவில் பரிசுத் தொகை வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

English Summary

Rs 50,000 reward for people who booked and travelled on government buses

Vignesh

Next Post

ஷாக்!. 8வது ஊதியக் குழு அமைக்கப்படாது?. புதிய வழிமுறை அறிமுகம்!. மத்திய அரசு திட்டம்!.

Mon Dec 9 , 2024
8th Pay Commission: மத்திய அரசு 8வது ஊதியக் குழுவுக்குப் பதிலாக, சம்பளத் திருத்தத்திற்கான புதிய வழிமுறையைக் கொண்டு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழு அமைப்பது தொடர்பான அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர், இது தற்போதைய பொருளாதார உண்மைகளின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும். நாட்டில், 8வது […]

You May Like