ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிதி உதவியை அறிவித்த ராஜஸ்தான் அரசு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் 9-ம் தேதி மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் சிலர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனைத் தொடர்ந்து பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த குழந்தை உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். 33க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் இருந்தவர்கள் சிவ கோரி குகைக் கோயிலில் இருந்து ரியாஸி மாவட்டத்தில் உள்ள கத்ராவுக்கு சென்று கொண்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; ஜம்மு காஷ்மீரில் யாத்ரீகர் பேருந்து மீது நடந்த கோழைத்தனமான தாக்குதலில் ஜெய்ப்பூரில் உள்ள சௌமூன் குடிமக்கள் நான்கு பேர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. “மிகவும் துயரம் நிறைந்த இந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியை அரசாங்கம் வழங்கும். இந்த துக்க நேரத்தில், மாநில அரசு இறந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளது, மேலும் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உறுதிபூண்டுள்ளது. உயிரிழந்த குடும்பத்தினரை சேர்ந்த ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.