இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசியில் 300 உதவி நிர்வாக அதிகாரி (ஏஏஓ) பணிகளுக்கான ஆட்சேர்க்கைக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.. அதன்படி, இந்த பணிகளுக்கு விண்னப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஜனவரி 31, 2023 வரை விண்ணப்பிக்கலாம்.

உதவி நிர்வாக அலுவலர்கள் தேர்வு செயல்முறை மூன்று சுற்றுகளை கொண்டது.. முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 17 மற்றும் பிப்ரவரி 20, 2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. மூன்று சுற்றுகளிலும் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் மருத்துவ சோதனைக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்..
தகுதி : விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.. 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்..
கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் மற்றும் அறிவிப்புக் கட்டணங்கள் ரூ. 700 ஆகும்.. எஸ்.சி’எஸ்.டி ஆகியோருக்கு ரூ 85 விண்ணப்பக்கட்டணம்..
சம்பளம் : எல்ஐசி உதவி நிர்வாக அதிகாரி தேர்வுக்கு தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் மாதத்திற்கு ரூ.53600 அடிப்படை ஊதியம் மற்றும் பிற சலுகைகளைப் பெறுவார்கள். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எல்ஐசியில் 300 உதவி நிர்வாக அதிகாரி ஆட்சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் லிங்க் : https://licindia.in/Bottom-Links/Careers/English-Notification-for-AAO(Gen)2023