fbpx

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000!… டோக்கன் பெறாதவர்களுக்கு தமிழக அரசு புதிய அறிவிப்பு!

டோக்கன் கிடைக்க பெறாத மற்றும் ரேஷன் கார்டு இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 நிவாரணம் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000/- (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் வீடுவீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது.

டோக்கன்கள் கிடைக்கப்பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும், குறிப்பிட்டுள்ள நியாய விலைக் கடைக்கு சென்று ரூ.6000/- பெற்றுக்கொள்ளளாம். டோக்கன்கள் கிடைக்கப்பெறாத மற்றும் குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நியாய விலைக் கடைகளில், அதற்கென உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அடுத்து வரும் நாட்களில், நியாய விலைக் கடைகளில் முற்பகல் 9.00 மணி முதல் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரையும் நிவாரணத்தொகை மற்றும் படிவம் வழங்கப்படும்.. மேற்படி நிவாரணத் தெகை பொதுமக்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிடவும், புகார் எழும் சூழலில், அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு நல்கிடவும் ஏதுவாக சென்னை எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சந்தேகங்களை தீர்க்க 044-2859 2828 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

மகளிர் உரிமை தொகை!… விடுபட்டவர்கள் ஜனவரியில் விண்ணப்பிக்கலாம்!… அமைச்சர் அறிவிப்பு!

Sun Dec 17 , 2023
மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி மற்றும் ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தற்போது நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பற்றி கேள்வி கேட்கின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக்கூடாது […]

You May Like