fbpx

தூள்…! அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு ரூ.75,000 நிதியுதவி…! தமிழக அரசு அறிவிப்பு…!

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியை கருத்தில் கொண்டு ஆசிரியர் நல நிதியிலிருந்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை; ஒவ்வொரு கல்வியாண்டிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வு பெற்ற, பணியில் இருக்கும்போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பிற்கு ரூ.5,000/-ம், பட்டயப்படிப்பிற்கு ரூ.2500/-ம் கடந்த 2021-2022ம் கல்வியாண்டு வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், பட்டப்படிப்பிற்கு ரூ.10,000/-ஆகவும், பட்டயப்படிப்பிற்கு ரூ.5,000/- ஆகவும் உயர்த்தி 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 2023-2024 ஆம் கல்வியாண்டு முதல் ஆசிரியர்களின் குழந்தைகள் (ஒரு ஆசிரியருக்கு ஒரு குழந்தைக்கு மட்டும்) உயர் கல்வி பயில்வதற்கு கல்வி கட்டணத் தொகையாக (Tuition fees) ரூ.50,000/-ம் தொழிற்கல்வி பட்டயப்படிப்பிற்கு ரூ.15,000/-ம் வழங்குவதற்கான நிபந்தனைகளைத் தெரிவித்து அதனடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் குழந்தைகளை தெரிவு செய்ய மாநில அளவில் குழு அமைக்க அனுமதி அளித்து ஆணை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மக்களே...! ஒரே நாடு, ஒரே பொருள், ஒரே ஒழுங்குமுறை' மூலம் வர்த்தகம்...! மத்திய அரசு ஒப்புதல்...!

Tue Feb 6 , 2024
ஒரே நாடு, ஒரே பொருள், ஒரே ஒழுங்குமுறை’ என்ற கருத்தாக்கத்தின் மூலம் எளிதாக வர்த்தகம் செய்வதை எளிமையாக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் டெல்லியில் மத்திய சுகாதார செயலாளர் அபூர்வா சந்திரா தலைமையில் நடைபெற்ற அதன் 43-வது கூட்டத்தில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான பல்வேறு திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உணவுப் பொருட்களுக்கான இந்திய தர நிர்ணய அமைவனம் […]

You May Like