வீடுகளுக்கு இலவச மின்சாரம் பெற விரும்பினால் “பிரதம் மந்திரியின் சூரிய விடு இலவச மின்சார திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீடுகளில் சோலார் பேனல் நிறுவி அதன்மூலம் இலவச மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு சார்பில் அதிகபட்சம் ரூ.78,000 மானியமும் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு சூரிய தகடுகள் பொறுத்தி இலவச மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால், மின் இணைப்பு வைத்திருக்கும் அனைத்து வீட்டு உரிமையாளர்களும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் பெறலாம். மேலும், இத்திட்டத்திற்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்படுகிறது. 1 கிலோவாட் – ரூ.30,000 மானியம், 2 கிலோவாட் ரூ.60,000 மானியம், 3 கிலோவாட் அதற்குமேல் ரூ.78,000 வரை மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
திட்டத்தில் மேற்கூறப்பட்ட மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களிலிருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்படும். 1 கிலோவாட் சூரிய தகடு ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்பப் பெறலாம்.