ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மக்களவை தொகுதியில் அனுப்கரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “இந்த மக்களவைத் தேர்தல் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானது. பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், பொதுப் பிரிவில் உள்ள ஏழைகளின் தேர்தல். இன்று நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை வேலையின்மை, பணவீக்கம் தான்.
மோடியின் முகம் 24 மணி நேரமும் ஊடகங்களில் தெரியும். சில சமயங்களில் அவர் கடலுக்கு அடியில் செல்வார், சில சமயங்களில் கடல் விமானத்தில் பறப்பார், சில சமயம் தட்டை அடித்து ஒலி எழுப்புவார், சில சமயங்களில் மொபைல் போன்களின் ஒளிரும் விளக்கைக் காட்டச் சொல்வார். மோடி கோடீஸ்வரர்களின் கடன்களை தள்ளுபடி செய்தார். ஆனால், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. பொதுமக்களாகிய உங்கள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது.
காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழை பெண்களுக்கும் மாதம் ரூ.8,500 வழங்கப்படும். இது உறுதி. காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளன. பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் தொழிலதிபர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் ஏழை மக்களுக்கும் 22 முதல் 25 வரை உள்ள பெரும் தொழிலதிபர்களுக்கும் இடையிலான போர். அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான போர்” என தெரிவித்துள்ளார்.
Read More : ’என்கிட்ட பிரச்சனை பண்ணவே வருவீங்களா’..? OPS-களால் மன உளைச்சலுக்கு ஆளான ஓ.பன்னீர்செல்வம்..!!