2023 மற்றும் 24 ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் முக்கிய திட்டங்கள் தொடர்பாக துறைவாரியாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
அதோடு, மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்த இருப்பதாகவும் அதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களின் நிலை என்ன? என்பது தொடர்பாகவும் புதிய அறிவிப்புகள் குறித்தும் ஆலோசனைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்த ஆலோசனைகள் அனைத்தும் முடிவடைந்து நிதிநிலை அறிக்கையை தயார் செய்யும் பணிகளில் நிதித்துறை தன்னை ஈடுபடுத்திக் கொள்ள உள்ளது. நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் மிக விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் அமைச்சரவை கூடி நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆகவே மார்ச் மாதம் 3வது வாரத்தில் சட்டசபையில் நிதிநிலை அறிக்கையை மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையை வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவிருக்கின்றார்.
எதிர்வரும் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்காவை தேர்தலை முன்னிட்டு பொதுமக்களை கவரும் விதத்திலான அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
அத்துடன் குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்பது தொடர்பான முக்கியமான அறிவிப்பும் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.