fbpx

ஜெயக்குமார் மர்ம மரணம்: விசாரணையில் மழுப்பிய ரூபி மனோகரன் MLA.!! வெளியான பரபரப்பு தகவல்.!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் காணாமல் போன நிலையில் தோட்டத்திலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தை மர்ம மரணமாக பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி MLA ரூபி மனோகரனிடம் காவல்துறை விசாரணை நடத்தியது.

மேலும் இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் கடிதம் எழுதி இருந்த ஜெயக்குமார் அதில் முன்னாள் அமைச்சர் தங்கபாலு மற்றும் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் MLA ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தின் மூலம் ரூபி மனோகரன் மற்றும் ஜெயக்குமார் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரிக்க முடிவு செய்த காவல்துறையினர் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரனை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று ஆஜரான ரூபி மனோகரனிடம் தனியார் இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் ரூபி மனோகரன் பதில் அளிக்க முடியாமல் திணறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மறைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனது மரண வாக்குமூல கடிதத்தில் குறிப்பிட்டது போல் பணம் கொடுக்கல் வாங்கல் குறித்து ரூபி மனோகரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அப்போது பதிலளித்த ரூபி மனோகரன், ஜெயக்குமார் மரணத்திலிருந்து தன்னால் இன்னும் மீள முடியவில்லை என மலுப்பலாக பதில் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனால் அவர் மீதான சந்தேகம் மேலும் அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More: “எனக்கு எதிராக ‘Vote Jihad’ செய்ய காங்கிரஸ் மக்களை தூண்டுகிறது..” பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!!

Next Post

அதிர்ச்சி! "2040-க்குள் புற்றுநோய் பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கும்.." - ஆய்வில் தகவல்!

Tue May 7 , 2024
இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயரும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்திய பன்னாட்டு சுகாதாரக் குழுமமான அப்பல்லோ மருத்துவமனை குழுமம், கடந்த மாதம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெற்காசிய நாட்டை உலகின் புற்றுநோய் தலைநகரம் என குறிப்பிட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த சுகாதாரம் குறைந்து வருவதற்கான ஆபத்தான அறிகுறியை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. கடந்த 2020ம் ஆண்டில் சுமார் 1.4 மில்லியனாக இருந்த […]

You May Like