ரஷ்யாவின் அணுசக்தி, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்புப் படைகளின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் செவ்வாய்கிழமை அதிகாலை மாஸ்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
கிரில்லோவின் உதவியாளரும் குண்டுவெடிப்பில் இறந்தார். ஸ்கூட்டரில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து சிதறியதால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்ய புலனாய்வாளர்கள் இரண்டு இறப்புகள் குறித்து ஒரு வழக்கைத் திறந்துள்ளனர் என்று குழுவின் செய்தித் தொடர்பாளர் ஸ்வெட்லானா பெட்ரென்கோ கூறினார்.
இதுகுறித்து ரஷ்யாவின் முக்கிய புலனாய்வு ஆணையம் , “இரண்டு படைவீரர்களின் கொலைக்கு குற்றவியல் வழக்கை ஆரம்பித்துள்ளது” என்று கூறியது. “விசாரணையாளர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் செயல்பாட்டு சேவைகள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர்,” என்று அது தெரிவித்தது. பிப்ரவரி 2022 இல் தொடங்கிய உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையின் போது உக்ரைனில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்காக, அக்டோபரில் பிரிட்டன் கிரில்லோவ் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
Read more ; செல்போன் வெடிக்க இதுதான் காரணம்.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! உஷார்..