கர்நாடாக மாநில பகுதியில் சந்திரசேகரன் என்பவர் கார் ஓட்டுநராக உள்ளார். அதே மாநிலத்தில் வசித்து வரும் 25 வயது பெண் ஒருவருடன் சென்னை நகரில் லிவிங் டூ கெதர் என்ற முறையில் நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்ததை தொடர்ந்து, திருமணம் செய்யும் வரை பிறக்கும் குழந்தையை ஒரு காப்பகத்தில் வைத்து பார்த்துக் கொள்ளலாம் என அந்த கார் ஓட்டுநர் அந்த பெண்ணிடம் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து பிறந்த குழந்தையை சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். மேலும் இந்த பெண்ணை கைவிட்டு விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார். இது குறித்து பெண் புகார் அளித்ததின் பேரில் சந்திரசேகரை கைது செய்யப்பட்டுள்ளார்.
புகாரின் பேரில் குழந்தையை விற்ற நெல்லை பகுதியில் உள்ள மதபோதகர் பிரான்சிஸ் மற்றும் ஈரோடு மாவட்ட பகுதியில் வசிக்கும் தேன்மொழி ஆகிய இரண்டு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடையே குழந்தைகள் விற்றதை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.